பிப்.18-ம் தேதி இந்தியாவிற்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்

தென்னப்பிரிக்க சிறுத்தை
தென்னப்பிரிக்க சிறுத்தைபிப்.18-ம் தேதி இந்தியாவிற்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்

தென்னாப்பிரிக்காவில் இருந்து அடுத்த வாரம் 12 சிறுத்தைகள் இந்தியாவில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குக் கொண்டு வரப்படுகின்றன.

தென்னப்பிரிக்காவைச் சேர்ந்த 12 சிறுத்தைகள் இந்தியா விமானப்படை மூலம் குவாலியர் நகரம் வழியாக மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு பிப்.18-ம் தேதி கொண்டு வரப்பட உள்ளன. கடந்த 2002-ம் ஆண்டு நபீயாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த எட்டுச் சிறுத்தைகளுடன் இந்த சிறுத்தைகளும் இணைய உள்ளன.

கடந்த மாதம் இந்தியாவிற்கும், தென்னப்பிரிக்காவிற்கும் சிறுத்தைகளை அனுப்புவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும், இது இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்னப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் தற்போது கொண்டு வரப்படுகின்றன. தேசிய பல்லுயிர் நிறுவனம், தேசிய பூங்காக்கள், அழிந்து வரும் வனவிலங்கு அறக்கட்டளை உள்ளிட்ட தென்னாப்பிரிக்க நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் உள்ள வனவியல், மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் இந்த முயற்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in