மைதானத்தில் விளையாடியபோது தாக்கியது மின்னல்: பள்ளியிலேயே பறிபோன மாணவனின் உயிர்

உயிரிழந்த மாணவன் கஜினி
உயிரிழந்த மாணவன் கஜினி

ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோயில் அரசு பள்ளி முன்பாக சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தாளையடிக்கோட்டையைச் சேர்ந்தவர் கஜினி. இவர், நயினார் கோயிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று மாலை மாணவர் கஜினி பள்ளியின் முன்பு சக மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த மாணவனை உடனடியாக மீட்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உடற்கூராய்விற்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் மாணவனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த நயினார்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in