தீபாவளி பண்டிகைக்கு 116 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு 116 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு 116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.

தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் நிறுவனம் சார்பில் 9 புதிய இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவின் அக்மார்க் நெய்யால் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

நெய், பாதுஷா, நட்ஸ் அல்வா, ஸ்டப்ட்டு மோதிபாக், காஜூ  பிஸ்தா ரோல், காஜூ  கத்லி உள்ளிட்ட இனிப்புகள் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டன. அத்துடன் பிரத்யேகமான முறையில் பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது 85 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. , இந்த ஆண்டு, அரசு துறை சார்ந்தவர்கள் ஆவின் இனிப்பு வகைகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு ஏற்கெனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன் 9 புதிய இனிப்பு வகைகளுடன் ரூ.250 கோடி வரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக ஆவின் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் விற்பனை அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in