
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் 1100 கிலோ குட்கா பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், காரமடை போலீசார் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பாலாஜி நகருக்கு விரைந்து சென்று, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஷேக் சாவூத் என்பவரது மகன் காஜா மொய்தீனை(48) கைது செய்தனர்.
காஜா மொய்தீனிடமிருந்து சுமார் ரூ.6,50,000 மதிப்புள்ள 1100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட காஜா மொய்தீனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.