அலைபேசி ஆபரேட்டர்களுக்கு 110 கோடி அபராதம்... தொல்லை அழைப்புகளை தொடரவிட்டதால் தண்டனை!

அலைபேசி கோபுரம்
அலைபேசி கோபுரம்

வாடிக்கையாளர்களுக்கு வரும் தொல்லை தரும்  அழைப்புகளை கட்டுப்படுத்தத் தவறியதாக அலைபேசி ஆபரேட்டர்களுக்கு ரூ.110 கோடி அபராதம் விதித்துள்ளது டிராய் அமைப்பு. 

தேவுசின் சௌகான்
தேவுசின் சௌகான்

தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால் மொபைல் ஆபரேட்டர்கள் மீது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அலைபேசி ஆபரேட்டர்களுக்கு  ரூ.110 கோடி அபராதம் விதித்துள்ளது டிராய். மேலும், சைபர் குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட சுமார் ரூ.1,000 கோடியை சம்பந்தப்பட்ட நான்கு லட்சம் பயனர்களுக்கு திரும்பக் கிடைக்கவும் வழி செய்திருக்கிறது. 

தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் மோசடியான தொலைத் தொடர்பு செயல்பாடுகளுக்கு எதிரான பரவலான நடவடிக்கையின் விவரங்களை அளித்து, போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 55.5 லட்சம் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

போலி ஆவணங்ள் மூலம் பெறப்பட்ட அலைபேசி இணைப்புடன் இணைக்கப்பட்ட சுமார் 9.9 லட்சம் வங்கிக் கணக்குகள் மற்றும் பேமென்ட் வாலட்டுகளும் முடக்கப்பட்டுள்ளன.

சைபர் க்ரைம் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக 2.8 லட்சம் அலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சௌகான் தெரிவித்துள்ளார். சைபர் க்ரைம், குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 1.3 அலைபேசி இணைப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் போலி அல்லது போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட அலைபேசி இணைப்புகளுடன் இணைக்கப்பட்ட 2.2 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அலைபேசி வாடிக்கையாளர்கள் விரும்பாத வணிகத் தொடர்பு அழைப்புகள் வருவதைக் கட்டுப்படுத்தத் தவறும் அலைபேசி ஆபரேட்டர்களுக்கு எதிராக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் போலியான வணிகச் செய்திகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க  இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சௌகான் கூறியிருக்கிறார். 

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in