இங்கிலாந்து அமைச்சரை விடாமல் துரத்திச் சென்று கேள்வி எழுப்பிய 11 வயது இந்திய சிறுமி: காரணம் என்ன?

இங்கிலாந்து அமைச்சரை விடாமல் துரத்திச் சென்று கேள்வி எழுப்பிய 11 வயது இந்திய சிறுமி: காரணம் என்ன?

இந்தியாவைச் சேர்ந்த 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம், எகிப்து பருவநிலை மாநாட்டில் இங்கிலாந்து அமைச்சரை வழிமறித்து கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் சிஓபி27 என்ற தலைப்பில் அனைத்து உகப் பருவநிலை மாற்ற மாநாடு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. நவம்பர் 18-ம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எகிப்துக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் எகிப்து பருவநிலை மாநாட்டில் இங்கிலாந்து அமைச்சரை வழிமறித்து கேள்வி எழுப்பினார். மணிப்பூரை சேர்ந்த 11 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் நிலக்கரி பயன்பாட்டுக்கு எதிராகவும் புவி வெப்பமயமாதலை தடுக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

எகிப்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள லிசிப்ரியா கங்குஜம், மாநாடு வளாகத்தில் இங்கிலாந்து அமைச்சரிடம் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை எப்போது விடுதலை செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனாலும், சிறுமி விடாமல் அவரை பின்தொடர்ந்து சென்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in