வைரலாகும் வீடியோ... நர்சுகளை கிண்டல் செய்து வெளியான ரீல்ஸ்... 11 கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்!

வைரலான ரீல்ஸில் ஆடிய மாணவர்கள்.
வைரலான ரீல்ஸில் ஆடிய மாணவர்கள்.

கர்நாடகாவில் செவிலியர்களை இழிவுபடுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட 11 மருத்துவ மாணவர்கள் கிம்ஸில் இருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள கர்நாடக மருத்துவ அறிவியல் கழகம் (கிம்ஸ்) உள்ளது. இதன் வளாகத்தில் செவிலியர்களை இழிவுபடுத்தும் வகையில் ரீல்ஸை உருவாக்கி சில மாணவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

பிரபலமான கன்னட திரைப்பட பாடலின் இசையைச் சேர்த்து இந்த வீடியோவில் பெண்களை நம்பக்கூடாது, செவிலியர்களை நம்பக்கூடாது என்ற வரிகளுடன் ஒலிக்கும் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதால், இந்த ரீல்ஸ் எடுத்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிம்ஸில் உள்ள செவிலியர்கள் வலியுறுத்தினர்.

மேலும் மருத்துவ மாணவர்களின் இந்த ரீல்ஸ், கர்நாடகா முழுவதும் உள்ள செவிலியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை கண்டித்து கோலார் மாவட்ட மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தையும் நடத்தினர்.

அத்துடன் இந்த வீடியோவை கண்டித்து, மாநில செவிலியர் சங்கம் கிம்ஸ் இயக்குநருக்கு கடிதம் எழுதியதோடு, மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து 11 மாணவர்களை ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து முதல்வர் டாக்டர் ஈஷ்வர் ஹோசம்னி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் செவிலியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், வேடிக்கைக்காகவே ரீல்ஸ் செய்ததாகவும் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in