அழிவின் விளிம்பில் கருப்பு காண்டாமிருகங்கள்: தாயகத்தில் கொல்லப்படும் அதிர்ச்சி பின்னணி!

அழிவின் விளிம்பில் கருப்பு காண்டாமிருகங்கள்: தாயகத்தில் கொல்லப்படும் அதிர்ச்சி பின்னணி!

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் ஜூன் மாதத்தில் கருப்பு காண்டாமிருக வேட்டையாடுதல் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொம்புகளுக்காக 11 கருப்பு காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக நமீபிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நமீபியாவின் மிகப்பெரிய எட்டோஷா தேசிய பூங்காவில் 2 வாரங்களில் 11 கருப்பு காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டதாகவும், அதன் கொம்புகள் வெட்டப்பட்டு இருந்ததாகவும் சுற்றுச்சூழல் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரோமியோ முயுண்டா தெரிவித்தார்.

அழிவின் விளிம்பில் உலகில் எஞ்சியிருக்கும் கருப்பு காண்டாமிருகங்களின் தாயகமான நமீபியாவில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 22 காண்டாமிருகங்கள் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விடவும் மிக அதிகமாகும். 2021-ம் ஆண்டில் 43 காண்டாமிருகங்களும், 2020-ல் 40 காண்டாமிருகங்களும் நமீபியாவில் கொல்லப்பட்டன.

வேட்டையால் கடந்த 20 ஆண்டுகளாகவே தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் காண்டாமிருக வேட்டையைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கொம்புகளுக்காக ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. காண்டாமிருகத்தின் கொம்புகள், முடி மற்றும் விரல் நகங்கள் கிழக்கு ஆசியாவில் மருந்தாகவும், நகைகளாகவும் கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வெள்ளை காண்டாமிருகங்கள் நமீபியாவில் அதிகளவில் உள்ளது. உலகின் மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு கருப்பு காண்டாமிருகங்களும் நமீபியாவில் உள்ளது. கொம்புகளுக்காக தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருவதால் நமீபியாவின் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 200 கருப்பு காண்டாமிருகங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பதாக இருப்பதாக சேவ் தி ரினோ டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in