திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அம்மா: வீட்டு வேலை செய்ய சொன்னதால் மாணவி எடுத்த விபரீத முடிவு

திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அம்மா: வீட்டு வேலை செய்ய சொன்னதால் மாணவி எடுத்த விபரீத முடிவு

தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரத்தில் வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என தாய் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம், ராயப்பநாடானூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகண்ணன். இவரது மனைவி தாழம்பூ. இந்தத் தம்பதிக்கு ரஞ்சினி(15) என்ற மகளும், இரு மகனும் உண்டு. ராஜகண்ணன் உடல்நலமின்மையால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ரஞ்சினி மாடியனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் யாரும் பார்க்காத போது ரஞ்சினி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் பாவூர் சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரித்தனர்.

வழக்கமாக வீட்டு வேலைகளை சுறு சுறுப்பாகச் செய்யும் தாழம்பூவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று சுதந்திர தின விடுமுறையில் ரஞ்சினி இருந்ததால் அவரிடம் தாழம்பூ வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால் ரஞ்சினி வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை. இதை தாழம்பூ கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ரஞ்சினி தூக்குப் போட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

தாய் திட்டியதைத் தாக்கிக் கொள்ள முடியாமல் அரசுப்பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in