தமிழ்நாட்டில் மே 19-ல் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு முடிவு தேதி அறிவிப்பு
தேர்வு முடிவு தேதி அறிவிப்புதமிழ்நாட்டில் மே 19-ல் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் பிளஸ் 1-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகிறது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2022-2023-ம் கல்வியாண்டிற்கான பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பிற்கு காலை 10 மணிக்கும், பிளஸ் 1-ம் வகுப்பிற்கு பிற்பகல் 2 மணிக்கும் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். இந்த இணையதளங்களில் தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து முடிவினை அறிந்து கொள்ளலாம்.

இதேபோல் அனைத்து மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் ஆகிய இடங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவினைப் பார்க்கலாம். மாணாக்கர்கள் பள்ளியில் சமர்பித்துள்ள உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் ”எனக் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in