6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று 109 டிகிரி வெயில்!

சென்னையில் வெயில் அதிகரிப்பு
சென்னையில் வெயில் அதிகரிப்பு6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று 109 டிகிரி வெயில்!

சென்னையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்சமாக சென்னையில் இன்று 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி என்ற அளவைத் தாண்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ( மே 16) 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தஅளவிற்கு அதிக வெப்பம் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை நோக்கி கடல் காற்று வீசுவது தாமதமாகி வருவதால் அனல் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னையில் வெயில் 107 டிகிரி என்ற அளவைத் தாண்டி கொளுத்தியது. இந்த ஆண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்ச வெப்பம் மேலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in