108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி பயங்கர விபத்து: நிறைமாத கர்ப்பிணி, தாய் துடிதுடித்து சாவு

108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி பயங்கர விபத்து: நிறைமாத கர்ப்பிணி, தாய்  துடிதுடித்து சாவு

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் கர்ப்பிணியும், அவரது தாயும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்டி அருகே உள்ளது நெஞ்சத்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் நிவேதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி நிவேதாவுடன் அவரது தாய் விஜயலட்சுமி மருத்துவமனைக்குச் சென்றார். செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் கர்ப்பிணி நிவேதா, அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்தில் நிவேதா வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது.

மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மலையரசன்(27), பணியாளர் திருச்செல்வி ஆகியோருக்கு படுகாயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், படுகாயடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in