கிரேனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: தனியார் நிறுவனத்தை கண்டித்து உறவினர்கள் மறியல்

கிரேனில் மின்சாரம் பாய்ந்து  வாலிபர் பலி: தனியார் நிறுவனத்தை கண்டித்து உறவினர்கள் மறியல்

மின்சாரம் தாக்கி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(32). இவருக்கு யமுனா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். மேலும் கிரேன் வாகனம் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார். இந்த கிரேன் வாகனம் மூலம் தொழிற்சாலைகளில் இரும்புப் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராணிப்பேட்டை, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் கிரேன் இயந்திரத்தை இன்று இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஜெகதீசன் உயிரிழந்தார். ஆனால் அவர் உயிரிழந்த விவரங்களைத் தனியார் நிறுவனம் அவர் குடும்பத்தினருக்கு உடனடியாக தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரமாக சாலையில் செல்ல முடியாமல் அங்கேயே வரிசைகட்டி நின்றன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in