யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டு ஆட்சியில் 10,713 என்கவுன்டர்கள்: மீரட் முதலிடம்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டு ஆட்சியில் 10,713 என்கவுன்டர்கள்: மீரட் முதலிடம்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுகள் ஆட்சியில் இதுவரை 10,713 என்கவுன்டர்களில் 63 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உ.பியில் என்கவுன்டர்கள் அதிகரிப்பு
உ.பியில் என்கவுன்டர்கள் அதிகரிப்புயோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டு ஆட்சியில் 10,713 என்கவுன்டர்கள்: மீரட் முதலிடம்

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றத்தில் இருந்து கடந்த கடந்த 6 ஆண்டுகளில் காவல்துறைக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடந்துள்ளதாகவும், அதில் 63 குற்றவாளிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு காவலரும் வீரமரணம் அடைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 2017-ம் ஆண்டு முதல் உ.பி காவல்துறை 10, 713 என்கவுன்டர்களை நடத்தியுள்ளது, அதில் அதிகபட்சமாக 3152 என்கவுன்டர்களை மீரட் காவல்துறை நடத்தியது. அதைத் தொடர்ந்து ஆக்ரா காவல்துறை 1844 என்கவுன்டர்களை நடத்தியது. இதில் 4654 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 14 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் . பரேலியில் 1497 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. அதில் 3410 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேர் இறந்தனர். இங்கு நடந்த என்கவுன்டர்களின் போது, 437 குற்றவாளிகள் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைகளில், 296 காவலர்கள் காயமடைந்தனர், ஒருவர் வீரமரணம் அடைந்தார். உ.பி மாநிலத்தில் நடைபெற்ற 10, 713 என்கவுன்டர்களில் 63 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in