மகிழ்ச்சியான செய்தி: இந்த பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் ரேஷன்கடைகள் மூலம் வழங்க ஏற்பாடு

மகிழ்ச்சியான செய்தி: இந்த பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் ரேஷன்கடைகள் மூலம் வழங்க ஏற்பாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாயை வழங்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன் கடைகளில் ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் ரேஷன் கடைகளில் அரிசியுடன், வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், தரமற்ற பொருட்கள் ரேஷனின் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அத்துடன் பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் ரொக்கப்பணத்தை நுகர்வோர்களுக்கு வங்கிக்கணக்கின் மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நீதித்துறை கருத்துத் தெரிவித்திருந்தது. ஆனால், ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டு தாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக்கணக்கு மூலம் பணம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால்தான் கூட்டுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனாலும் இன்னும் அந்தப் பணி முழுமையாக முடிவடையவில்லை. இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் அரசு நிர்வாகத்திடம் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் பணம் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் மூலம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in