ஹெல்மெட் அணியாவிட்டால் 1,000 ரூபாய் அபராதம்: அரசு அதிரடி!

புதுச்சேரி சட்டமன்றம்
புதுச்சேரி சட்டமன்றம்

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை போலீஸார் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த இருதினங்களுக்கு முன்புகூட இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஹெல்மெட் அணிய வேண்டும் என புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

புதுச்சேரி சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் வெளியூரில் இருந்து மோட்டார் சைக்கிளிலேயே பலரும் வருகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ஹெல்மெட் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காகவே ஹெல்மெட் குறித்து மக்களிடம் தொடர் விழிப்புணர்வையும் புதுச்சேரி காவல் துறை செய்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு, ‘ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்’ என அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in