மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு: தமிழக அரசு அதிரடி சலுகை

மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு: தமிழக அரசு அதிரடி சலுகை

மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகையை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100 சதவீத விலக்கு அளித்து தமிழக அரசு அரசாரணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "1.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in