2 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கிய 100 அதிகாரிகள் கைது: இந்தியாவில் எங்கு தெரியுமா?

லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது
லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது2 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கிய 100 அதிகாரிகள் கைது: இந்தியாவில் எங்கு தெரியுமா?

கடந்த 2 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக அசாமில் 100 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநில ஊழல் தடுப்பு இயக்குநரகம், பொதுமக்களின் தீவிர ஒத்துழைப்புடன் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எதிராக இடைவிடாத நடவடிக்கையையை எடுத்து வருகிறது.

கடந்த 2021 மே 10-ம் தேதி முதல் 2023 மே 10-ம் தேதி வரை அசாமில் ஊழல் தடுப்பு இயக்குநரகம் 89 இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் 1கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 235 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 7 இடைத்தரகர்கள், 100 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 41 அதிகாரிகளில் 21 பேர் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 43 அரசு அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஹெல்ப்லைன் எண்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் முதலமைச்ச ர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து கடந்த 10-ம் தேதியுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்களைப் பொதுமக்கள் பதிவு செய்ய மாநில காவல்துறை கட்டணமில்லா புகார் 18003453767, வாட்ஸ்அப் எண் 6026901243 ஆகியவற்றை அசாம் மாநில அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in