அதிர்ச்சி... இன்று பூமிக்கு அருகே கடக்கும் விண்கல்... நாசம் விளைவிக்குமா என நாசா தீவிர கண்காணிப்பு!

பூமி - விண்கல் சித்தரிப்பு
பூமி - விண்கல் சித்தரிப்பு

100 அடி விட்டமுடைய விண்கல் ஒன்று பூமிக்கு ‘அருகே’ இன்று கடக்க இருக்கிறது. எனினும் அதனால் பூமிக்கு ஏதேனும் நாசம் விளைய வாய்ப்புண்டா என நாசா விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

சூரியக் குடும்பத்தின் கோள்கள், துணைக்கோள்கள் மட்டுமன்றி எண்ணற்ற விண்கற்களும் தம் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தமக்கான பாதையில் அவை சுழன்றாலும், அந்தப் பாதை பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும்போது அல்லது குறுக்கிடும்போது, பூமிக்கான அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இம்மாதிரி பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து, பூமியின் ஈர்ப்பு சக்தியால் இழுக்கப்பட்டு அதன் மீது மோதிய விண்கற்கள் ஏராளம்.

பூமியும் விண்கற்களும்
பூமியும் விண்கற்களும்

இந்த விண்கற்கள் மோதலால் பூமியின் உயிரினங்கள் அழிந்து, புதிய உயிரினங்கள் தழைக்கவும் காரணமாகி இருக்கின்றன. அந்தளவுக்கு அளவில் பெரிய விண்கற்கள் அண்மைக் காலத்தில் பூமியை தாக்கவில்லை. மற்றபடி ஏராளமான அளவில் சிறிய விண்கற்கள் அவ்வபோது பூமியின் மீது தூவலாய் விழுந்தபடியே இருக்கின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தை கடப்பதற்குள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதால் அவற்றால் பூமிக்கு பெரும் அச்சுறுத்தல் கிடையாது.

எனினும், பிரபஞ்சத்தின் தொலைவுகளில் ஒப்பீட்டளவில் பூமிக்கு ’அருகே’ வரும் விண்கற்கள், அவை குறித்தான ஆராய்ச்சியை கோருகின்றன. அந்த வகையில் பூமியை ‘நெருக்கமாக’ இன்று கடக்க வாய்ப்புள்ள 100 அடி விட்டமுடைய 2024 FL3 என்ற விண்கல் குறித்து, சர்வதேச நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

பூமியை நெருங்கும் விண்கல் -சித்தரிப்பு
பூமியை நெருங்கும் விண்கல் -சித்தரிப்பு

பூமியின் அருகே 20,30,000 மைல் தொலைவில் இந்த விண்கல் பூமியைக் கடக்க இருக்கிறது. இவ்வாறு கடக்கும் விண்கல் பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்ற போதும், ஒழுங்கற்ற சுற்று வட்டப்பாதையில் சுழலும் இந்த விண்கற்கள், கணிக்க இயலாத காரணங்களால் விபரீதத்துக்கு வழி செய்யக்கூடும். இதுமட்டுமன்றி 2021 FD1 என்றொரு விண்கல், 5,58,000 மைல்கள் தொலைவில், அடுத்தபடியாக பூமியை கடக்க இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in