
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (42). இவர் கடந்த 2016-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று தங்கராஜிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.