சவுதிக்கு கடத்த முயன்ற ஒரு கோடி போதை பொருள்; கேரள வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: சென்னை நீதிமன்றம் அதிரடி

சவுதிக்கு கடத்த முயன்ற ஒரு கோடி போதை பொருள்; கேரள வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: சென்னை நீதிமன்றம் அதிரடி

சவுதி அரேபியாவுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தாம் ஃபெட்டமைன் போதை பொருளை கடத்த முயன்ற வழக்கில் கேரள வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மே 18-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்தினர். அதில் கேரளாவைச் சேர்ந்த மொய்தீன் என்பவரிடம் 535 கிராம் மெத்தாம் ஃபெட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இந்த போதை பொருளை கேரளா வழியாக சவுதி அரேபியாவிற்கு கடத்த முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மொய்தீன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, குற்றம்சாட்டப்பட்ட மொய்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in