‘முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பான்’ - பாசப்போராட்டம் நடத்திய குடும்பத்தினர்!

‘முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பான்’ - பாசப்போராட்டம் நடத்திய குடும்பத்தினர்!

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் திங்கட்கிழமை காலை சம்பல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது.

சிறுவனை முதலை விழுங்கியதைக் கண்டு சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் உடனடியாக குச்சிகள், கயிறு மற்றும் வலை மூலமாக முதலையை பிடித்தனர். அதன்பின்னர் அவர்கள் முதலையை ஆற்றில் இருந்து வெளியே இழுத்தனர்.

இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் முதலை பிடிக்கும் குழு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த குழுவினர் கிராம மக்களின் பிடியில் இருந்து முதலையை மீட்க முயன்றனர். ஆனால், மாலை வரை சிறுவனின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை. ‘முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருப்பான், எனவே முதலையின் வயிற்றை கிழித்து சிறுவனை மீட்க வேண்டும்’என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர் இல்லையென்றால் முதலை அந்த சிறுவனை கக்கினால் தான் அதை விடுவிப்போம் என்று கூறினர்.

சிறுவன் மீதுள்ள பாசத்தில் குடும்பத்தினர் இவ்வாறு பேசியதான் என்ன செய்வதென்று தெரியாமல் காவல்துறையினர் திணறினர். அதன்பின்னர் காவல் துறையினர் மற்றும் அலிகேட்டர் துறையினரின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிராம மக்கள் முதலையை விடுவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in