கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள்; தூத்துக்குடி துறைமுகத்தில் அதிரடி சோதனை: அதிர்ந்து போன அதிகாரிகள்

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள்; தூத்துக்குடி துறைமுகத்தில் அதிரடி சோதனை: அதிர்ந்து போன அதிகாரிகள்

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப் பொருட்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கண்டெய்னர்களை அதிகாரிகள் ஒவ்வொன்றாக சோதனை செய்தனர். இதில் ஒரு கண்டெய்னரில் 10 டன் போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு 1.75 கோடி என்று தெரியவந்துள்ளது. மேலும், கண்டெய்னர் கொண்டு வந்த மதுரையில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக குஜராத் துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் அண்மையில் ஆயிரம் கோடிக்குமேல் மதிப்புள்ள போதைப்பொருள்கள் சிக்கியது. போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த போதை கும்பல் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மாணவ, மாணவிகளை குறிவைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

இதனால் மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முதல்வர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் நடமாட்டம் தமிழகத்தில் சற்று குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு 10 டன் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in