வாணவேடிக்கை வெடி கூட்டத்திற்குள் புகுந்தது: தேவாலயத் திருவிழாவில் 10 பேர் படுகாயம்

புனித அதிதூதர் தேவாலயம்
புனித அதிதூதர் தேவாலயம்

நாகர்கோவில் அருகே தேவாலய தேர்த்திருவிழாவின் போது பட்டாசு வெடித்து பக்தர்கள்  பத்து பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் அருகேயுள்ள  ஆசாரிப்பள்ளம் புனித அதிதூதர் கத்தோலிக்க தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான  தேர்பவனி நேற்று இரவு  விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது  வாணவேடிக்காக பற்ற வைக்கப்பட்ட  மேல் நோக்கி சென்று வெடித்து வர்ணங்களை  உருவாக்கும்  ராக்கெட் வெடி  எதிர்பாராத விதமாக கூட்டத்தை நோக்கி  திரும்பிச்சென்று வெடித்தது. 

இதனால் மக்கள் சிதறி ஓடினர். கூட்டத்துக்குள்  வெடிகள் வெடித்ததில் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் பாக்கியம்,  சிலுவைமேரி உள்ளிட்ட பெண்கள் உட்பட  பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அனுமதிக்கப் பட்டுள்ளனர் . இச்சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இச்சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் . 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in