பிஹார் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள்’ - நிதிஷ் குமாரின் அசத்தல் அறிவிப்பு

பிஹார் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள்’ - நிதிஷ் குமாரின் அசத்தல் அறிவிப்பு

பிஹார் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்ற துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் லட்சிய வாக்குறுதியை ஆதரித்து, மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்றைய சுதந்திர தின உரையில் பேசியுள்ளார்.

பட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய நிதிஷ் குமார், “ ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு குறைந்தபட்சம் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளையும் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளது. மாநிலத்தின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் நிறையச் செய்வோம். அரசு மற்றும் தனியார் துறையில் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்த கடுமையாக உழைப்போம்” என தெரிவித்தார்

துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 2020 பிஹார் சட்டமன்றத் தேர்தலின் போது, நாங்கள் வெற்றிபெற்றால் ​​10 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். தற்போது ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி அமைந்த பின்னரும் இதனை பலமுறை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் முதலமைச்சரின் இன்றைய பகிரங்க அறிவிப்புக்குப் பிறகு தேஜஸ்வி யாதவ், “முதலமைச்சரின் இந்த மகத்தான அறிவிப்பு ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டிய உண்மையான பிரச்சினை. இதற்காக இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும்” என்றும் கூறினார்

முன்னதாக தேஜஸ்வியின் 10 லட்சம் வேலை வாய்ப்பு வாக்குறுதியைப் பற்றி பாஜக பலமுறை கிண்டல் செய்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்த அவர், “இந்து-முஸ்லிம் தலைப்புகளுக்குப் பதிலாக எங்களிடம் வேலை வாய்ப்பு பற்றிக் கேட்பது வெற்றி. உறங்கிக் கொண்டிருந்த மக்களும், வேலைகளைப் பற்றிக் கேட்காமல் இருந்தவர்களும், ஊடகங்களும் இப்போது விழித்துக் கொண்டதற்கு நன்றி. இது வெற்றியல்லவா?" என அவர் கூறியிருந்தார்.

மேலும், “பாஜக தனது வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை, நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆனால் 2014-ல், நரேந்திர மோடி உறுதியளித்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை திட்டம் என்ன ஆனது என்று பாஜகவினரிடம் கேளுங்கள் " என்று கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in