குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய எஸ்ஐக்கு அதிர்ச்சி; நகை, வெள்ளி திருட்டு: கொள்ளையர்கள் அட்டகாசம்

திருட்டு
திருட்டு

குலதெய்வ கோயிலுக்குச் சென்ற பட்டாலியன் எஸ்ஐ வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை, வெள்ளி சாமான்கள் மற்றும் பணம் திருடு போனது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோமதிவிநாயக கண்ணன். இவர் 11-வது பட்டாலியன் பிரிவில் எஸ்ஐ., ஆக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணன்கோவில் அருகே குன்னூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு இவர் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றார்.

கோயிலில் இருந்து வீடு திரும்பியபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகை, வெள்ளி சாமான்கள், 3 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது.

இது குறித்து போலீஸில் கோமதிவிநாயக கண்ணன் புகாரளித்தார். இதன்படி திருவில்லிபுத்தூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in