`வீராங்கனையின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி; அரசு வேலை'- பிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் தகவல்

`வீராங்கனையின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி; அரசு வேலை'- பிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் தகவல்

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு செய்யப்பட்ட தவறான சிகிச்சையால் அவரது வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாணவியின் இறப்பு செய்தி அறிந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அப்போது பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறியதோடு, மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் மாணவி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. இருப்பினும் ரத்த ஓட்ட பாதிப்பால் அடுத்தடுத்த உறுப்பு செயலிழந்து வீராங்கனை பிரியாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அதே நேரத்தில் இது கவனக்குறைவான சிகிச்சை. கவனக்குறைவாக கட்டுப்பட்டு கவனிக்காமல் மருத்துவர்கள் விட்டு விட்டார்கள். கட்டுப்போட்டதால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நின்றுவிட்டது. இது மருத்துவர்களின் கவனக்குறைவு தான். இதைத்தான் நான் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தேன். கவனக்குறைவான செயல்பட்ட மருத்துவர்களை உடனடியாக இடமாற்றம் செய்தோம். மாணவி மரணத்திற்குப் பிறகு இந்த இரண்டு டாக்டர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in