கொத்தாகச் சிக்கிய பத்து போலி மருத்துவர்கள்: திருப்பத்தூர் திடீர் ஆய்வில் அதிர்ச்சி!

கொத்தாகச் சிக்கிய பத்து போலி மருத்துவர்கள்: திருப்பத்தூர் திடீர் ஆய்வில் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆய்வில் சிக்கும் போலி மருத்துவர்களுக்கு உடனடியாக உரியத் தண்டனை கிடைக்காகக் காரணத்தால் அவர்கள் மீண்டும் மருத்துவர்களாக பணியைத் தொடர்கிறார்கள். இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரே உடந்தையாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து மருத்துவராக பணியாற்றிய போலி மருத்துவர் பிடிபட்டார். அதுபோல் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அங்கநாதவலசைப் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்(50), ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா(45), ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். அதுபோல் வடுகமுத்தம்பட்டியைச் சேர்ந்த உமா சரஸ்வதி(37), கந்திலி பகுதியைச் சேர்ந்த சென்னம்மாள்(35) ஆற்காடு, தாமரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஷா(45), திமிரி அடுத்துள்ள காவனூர் புகுதியைச் சேர்ந்த இளங்கோ(47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆம்பூர் பகுதியில் ஜெயபால்(87), பாலகிருஷ்ணன்(73), வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மணி(52), திம்மாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in