10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சீரம் நிறுவனம்

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சீரம் நிறுவனம்

சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதியாகி விட்டதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்திய ஒரு சொல் கரோனா. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைப்பழிவாங்கிய கரோனா, பொருளாதார பேரழிவையும் உருவாக்கியுள்ளது. கரோனாவைத் தடுக்க தடுப்பூசி மருந்து ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. உலகம் முழுவதும் தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இந்தியாவிலும் அதன் பரவல் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதது காரணமாக பல கோடி டோஸ் தடுப்பூசி மருந்து காலாவதியாகி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதார் பூனாவாலா
அதார் பூனாவாலா

புனேவில் நடைபெற்ற வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா பேசுகையில்," நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது. பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை. இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை. தற்போது, நாங்கள் ஒமிக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in