
இந்த ஆண்டில் செப்டம்பர் 2023 வரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
2022-23 ம் நிதியாண்டில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக நிதியமைச்சகம் கண்டறிந்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஆறு மாதத்தில் நடந்த வரி ஏய்ப்பு, கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒட்டுமொத்தமாக 2023 24ம் நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 36,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2023 வரை 57 ஆயிரம் கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 6,000க்கும் மேற்பட்ட போலி ஐடிசி வழக்குகளை இன்று வரை கண்டறிந்துள்ளது. அவற்றில் சம்பந்தப்பட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 91 மோசடியாளர்கள் பிடிபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பவர்களைக் கைது செய்ய வழிவகுத்த மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி அதிகாரிகள் இரண்டு மாத ஏய்ப்பு தடுப்பு கண்டறியும் முயற்சியை மே 16 அன்று தொடங்கினர். முதல் வாரத்திலேயே சுமார் 10,000 போலி பதிவுகள் கண்டறியப்பட்டன என்று நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!