`புகாருக்கு நடவடிக்கை எடுக்கலையா?; என்னிடம் சொல்லுங்கள்'- அதிரடி காட்டும் திண்டுக்கல் எஸ்பி

`புகாருக்கு நடவடிக்கை எடுக்கலையா?; என்னிடம் சொல்லுங்கள்'- அதிரடி காட்டும் திண்டுக்கல் எஸ்பி

"போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னிடம் நேரில் புகார் அளிக்கலாம்" என திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் அறிவித்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்பட 36 காவல் நிலையங்கள் உள்ளன. குற்ற வழக்குகள் தொடர்பாக மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். புகார்களை பெற்று கொள்ளும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு சென்றது. நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையங்களுக்கு போலீஸார் அலைக்கழித்து வந்தனர். இதனால் புகார் அளித்தோர் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தனர்.

இது குறித்து திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்ட மக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லையெனில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன் தோறும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புகார் அளிக்கலாம்" என தெரிவித்துள்ளார். எஸ்பியின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in