பாலமேடு ஜல்லிக்கட்டில் 22 பேர் காயம்: 4 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 4-ம் சுற்று நிறைவில் 22 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 12 மணி நிலவரப்படி 420 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகளின் உரிமையாளர்கள் 7 பேர், மாடு பிடி வீரர்கள் 5 பேர், பார்வையாளர்கள் 10 பேர் என 22 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.

நான்காம் சுற்று நிறைவில் 16 காளைகளை அடக்கி பாலமேடு மணி முதலிடத்தில் உள்ளார். பாலமேடு ராஜா 11 காளைகளை அடக்கி 2-ம் இடம், தலா 9 காளைகளை அடக்கி பாலமேடு அரவிந்த், அலங்காநல்லுார் வாஞ்சிநாதன் ஆகியோர் 3-ம் இடத்தில் உள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், காளையின் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in