நீலகிரியில் தொடரும் கனமழை: மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய உத்தரவு

நீலகிரியில் தொடரும் கனமழை: மாணவர்களுக்கு  கலெக்டர் முக்கிய உத்தரவு

தமிழகத்தில் தொடரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலுள்ள பள்ளிகளுக்கு இன்று ( ஆக.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையால் நீலகிரியில் நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். இதேபோல வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளளது.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் திருச்சூர், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in