தலைக்கேறிய போதையால் பயங்கரம்: தாய், அக்காவை கத்தியால் குத்திக் கொன்ற சிறுவன்

தலைக்கேறிய போதையால் பயங்கரம்: தாய், அக்காவை கத்தியால் குத்திக் கொன்ற சிறுவன்

போதைத் தலைக்கேறியதால் சமையலறைக்குள் புகுந்த சிறுவன் கத்தியால் தனது தாய், அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு லட்சுமி(44), மகள் அஞ்சல்(21) மற்றும் 19 வயது மகன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கக்த்தினர் அங்கு சென்று பார்த்த போது லட்சுமி, அஞ்சல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீஸார் கொலையாளிகளைத் தேடினர். விசாரணையில் லட்சுமியின் மகனான சிறுவன் அவர்களைக் கொலை செய்தது தெரிய வந்தது.

அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்த போது, போதை தலைக்கேறியதால் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சமையலறைக் கத்தியால் தாயையும், அக்காவையும் அவர் குத்திக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீஸார், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். குடிபோதையில் தாய், அக்காவை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in