பகீர்... சிறுமியை நிர்வாணப்படுத்தி வீடியோ... அரசு மருத்துவமனை ஊழியரின் வெறிச்செயல்!

சிறுமி
சிறுமி

கர்நாடகாவில் சிறுமியை நிர்வாணப்படுத்தி, அரசு மருத்துவமனை ஊழியர் மிரட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொப்பல் மாவட்டம் கங்காவதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு சிறுமி தனது தந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தாள். அப்போது சிறுமிக்கும், முஸ்தபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே முஸ்தபா, சிறுமியை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து கொண்டார்.

 கைது
கைது

பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி உள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி இது குறித்து பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக முஸ்தபாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in