கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் மோடி புதுப் பாய்ச்சல்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது குறித்த செய்தி கட்டுரை ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, அக்கட்சியை மக்கள் நம்ப தயாராக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்களை குறிப்பிட்டு, ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி கட்டுரை வெளியாகி உள்ளது.

இந்த செய்தி கட்டுரை இணைப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் இரக்கமின்றி நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி இரக்கமின்றி கைவிட்டது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன.

கச்சத்தீவு
கச்சத்தீவு

இது ஒவ்வொரு இந்தியருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என மக்களின் மனதில் மீண்டும் உறுதியாக பதிந்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் காங்கிரஸின் வேலைத்திட்டம் 75 ஆண்டுகளாக தொடர்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இந்திரா காந்தி அரசு, கச்சத்தீவு தீவை 1974ல் இலங்கைக்கு வழங்கியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதல் மீண்டும் சூடிபிடித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in