இமாசல பிரதேச முதல்வருக்கு கரோனா பாதிப்பு: பிரதமருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

இமாசல பிரதேச முதல்வருக்கு கரோனா பாதிப்பு: பிரதமருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருந்தார், ஆனால் தற்போது அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு முன் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் வழக்கமான கரோனா சோதனையின் போது அவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

முதல்வர் சுகுவிற்கு அறிகுறி ஏதும் இல்லையென்றும், அதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் இமாசல பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 16-ம் தேதி ராஜஸ்தானில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில், இமாசல பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் பிற எம்எல்ஏக்களுடன் முதல்வர் சுகுவும் கலந்துகொண்டார்.

சுகு டெல்லியில் தங்கியிருந்து, கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உட்பட பல காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in