
ஆண் நண்பருடன் தனிமையில் மனைவி இருந்ததைப் பார்த்து கணவன் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனைவி தனது நண்பருடன் சேர்ந்து கணவனை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த கொடூரச் சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கந்தன் ஓட்டுநராக பணி செய்து வந்துள்ளார். கந்தன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில் கணவன் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வீட்டிற்கு பால் பாக்கெட் வாங்கி கொடுத்துள்ளார் சிவசக்தி. அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் தவறான உறவாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார் கந்தன். இதனிடையே, சந்தியாவின் செல்போனை திடீரென எடுத்துப் பார்த்துள்ளார் கந்தன். அப்போது, சிவசக்தியுடன் சந்தியா ஆபாசமாக உரையாடி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் கந்தன். அதே நேரத்தில் குழந்தைகள் இருப்பதால் மனைவியை திருந்தி வாழுமாறு கண்டித்து இருக்கிறார். ஆனால், சந்தியாவிற்கோ கணவனை விட சிவசக்தி மேல் ஈர்ப்பு இருந்து வந்துள்ளது. கணவனின் பேச்சை பொருட்படுத்தாத சந்தியா மீண்டும் உறவை தொடர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் மனைவியிடம் இரவு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்று இருக்கிறார் கந்தன். அவர் வேலைக்கு சென்றதை உறுதிப்படுத்திய சந்தியா, சிவசக்தியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடையே, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவன் கந்தன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் மனைவியுடன் சிவசக்தியை தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் கோபம் அடைந்தார். ஆத்திரத்தில் சந்தியாவை தாக்கி உள்ளார் கந்தன். இதனால் ஆத்திரமடைந்த சிவசக்தி, சந்தியா உடன் சேர்ந்து வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கந்தன் முகத்தில் வீசி இருக்கின்றனர். கண் எரிச்சல் தாங்க முடியாமல் திக்குமுக்காடிய கந்தனை இருவரும் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நெஞ்சு மட்டும் கழுத்து பகுதியில் 25 முறை சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் கந்தன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து இருக்கிறார். கொலையை மறைக்க திட்டம் தீட்டிய இருவரும் கந்தனின் நண்பரான வசந்தை உதவிக்கு அழைத்துள்ளனர்.
அப்போது தன்னுடைய கணவர் கழிப்பறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார் சந்தியா. இதை நம்பிய வசந்த் உடனடியாக கந்தனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே கந்தன் இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் சந்தியாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது சந்தியாவின் லீலைகள் அம்பலமானது. இதையடுத்து, சிவசக்தி, சந்தியாவை காவல்துறையினர் கைது செய்தனர். தவறான உறவால் கணவனைக் கொன்ற மனைவி தற்போது சிறையில் இருக்கிறார். ஆனால், குழந்தைகளோ அநாதைகளாகி இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.