யுத்தம்

குண்டு துளைத்த

கட்டிட இடுக்கிலிருந்து

புகைந்தபடி

வெளியேறிக்கொண்டிருந்தன

சாமானியக் குடும்பத்தின்

எதிர்காலக் கனவுகள்

- கா.ந.கல்யாணசுந்தரம்

கனம்

காற்றில்லா

பலூன்கூட

கனமாகத்

தெரிகிறது

கடைகளில்

மாதக்கடைசியில்

பிள்ளையின்

பிறந்த நாள்!

- இரட்டைக்கரடு மு.இளங்கோவன்

தொடர்பு எல்லை

சிட்டுக்குருவியின்

கீச்சலில் குறுந்தகவல்

பூனைக்குட்டியின்

மியாவில்

நோட்டிஃபிகேஷன்

காதல் சோகம் தத்துவமென

மனதிற்கேற்ப ரிங்டோன்கள்

சிறுவொலிக் குறிப்புகள்

சிணுங்கித் துரத்துகின்றன

தூரத்து மனிதர்களை...

சாலையோர

விளிம்பு மனிதர்களின்

பசி ஆலாபனைகள்தான்

நுழைய

மறுக்கின்றன

செவிகளின் தொடர்பு எல்லைக்குள்!

- ரகுநாத் வ

துயரக் கடல்

எல்லை தாண்டியதாக

சுடப்படுவதும்

கவிழும் படகால்

உள்ளே விழுந்து

உயிர்விடுவதுமாக

தனக்குள் நடக்கும்

மீனவ மரணங்களிலிருந்து

மீளமுடியாத் துயரத்தோடு

ஒவ்வொரு முறையும்

அலைத் தலைகளால்

கரையில்

முட்டி மோதிக்கொள்கிறது

கடல்.

- காசாவயல் கண்ணன்

எல்லை ஒப்பந்தம்

சுற்றுச்சுவர் தாண்டிய இனிப்பு மாங்காய்கள்

எட்டிப்பார்க்கும் ஒற்றை ரோஜா

கை நீட்டிப் பறிக்கக் கறிவேப்பிலை

விருந்துக்கு வாழையிலைகள்

எல்லாம் சரிதான்

மரத்தின் சருகுகள் மட்டும்

உதிராமலிருக்க வேண்டும் இந்தப் பக்கம்.

- கி.சரஸ்வதி

நதியின் பரிசு

நீர் வரத்து குறைந்தப் பின்னாலும்

தரையோடு பரவி

தன்மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டு

பொடி நடையாகச் செல்லும் சிறுநதியொன்றில்

கைகளில் கொள்ளும் கற்களை எடுத்து

ஒவ்வொன்றாக எறிகிறது குழந்தையொன்று

ஒவ்வொரு எறிதலுக்கும்

ஒரு புன்னகையைத் தெறிக்கவிட்டு

ஓடுகிறது அந்நதி...

- நேசன் மகதி

வேகம்

குழந்தைகளோடு

மிட்டாய் கடைகளை

கடக்கும்போதெல்லாம்

வேகம் கூடுகிறது...

ஏழைத் தந்தைகளின் கால்கள்!

-மு.முபாரக்

யுத்தம்

குண்டு துளைத்த

கட்டிட இடுக்கிலிருந்து

புகைந்தபடி

வெளியேறிக்கொண்டிருந்தன

சாமானியக் குடும்பத்தின்

எதிர்காலக் கனவுகள்

- கா.ந.கல்யாணசுந்தரம்

கனம்

காற்றில்லா

பலூன்கூட

கனமாகத்

தெரிகிறது

கடைகளில்

மாதக்கடைசியில்

பிள்ளையின்

பிறந்த நாள்!

- இரட்டைக்கரடு மு.இளங்கோவன்

தொடர்பு எல்லை

சிட்டுக்குருவியின்

கீச்சலில் குறுந்தகவல்

பூனைக்குட்டியின்

மியாவில்

நோட்டிஃபிகேஷன்

காதல் சோகம் தத்துவமென

மனதிற்கேற்ப ரிங்டோன்கள்

சிறுவொலிக் குறிப்புகள்

சிணுங்கித் துரத்துகின்றன

தூரத்து மனிதர்களை...

சாலையோர

விளிம்பு மனிதர்களின்

பசி ஆலாபனைகள்தான்

நுழைய

மறுக்கின்றன

செவிகளின் தொடர்பு எல்லைக்குள்!

- ரகுநாத் வ

துயரக் கடல்

எல்லை தாண்டியதாக

சுடப்படுவதும்

கவிழும் படகால்

உள்ளே விழுந்து

உயிர்விடுவதுமாக

தனக்குள் நடக்கும்

மீனவ மரணங்களிலிருந்து

மீளமுடியாத் துயரத்தோடு

ஒவ்வொரு முறையும்

அலைத் தலைகளால்

கரையில்

முட்டி மோதிக்கொள்கிறது

கடல்.

- காசாவயல் கண்ணன்

எல்லை ஒப்பந்தம்

சுற்றுச்சுவர் தாண்டிய இனிப்பு மாங்காய்கள்

எட்டிப்பார்க்கும் ஒற்றை ரோஜா

கை நீட்டிப் பறிக்கக் கறிவேப்பிலை

விருந்துக்கு வாழையிலைகள்

எல்லாம் சரிதான்

மரத்தின் சருகுகள் மட்டும்

உதிராமலிருக்க வேண்டும் இந்தப் பக்கம்.

- கி.சரஸ்வதி

நதியின் பரிசு

நீர் வரத்து குறைந்தப் பின்னாலும்

தரையோடு பரவி

தன்மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டு

பொடி நடையாகச் செல்லும் சிறுநதியொன்றில்

கைகளில் கொள்ளும் கற்களை எடுத்து

ஒவ்வொன்றாக எறிகிறது குழந்தையொன்று

ஒவ்வொரு எறிதலுக்கும்

ஒரு புன்னகையைத் தெறிக்கவிட்டு

ஓடுகிறது அந்நதி...

- நேசன் மகதி

வேகம்

குழந்தைகளோடு

மிட்டாய் கடைகளை

கடக்கும்போதெல்லாம்

வேகம் கூடுகிறது...

ஏழைத் தந்தைகளின் கால்கள்!

-மு.முபாரக்