பிரதியன்புகிளைகளை ஆட்டிபாரமாக இருக்கும்மழைத்துளிகளைகீழிறக்கிவிடுகிறேன்பதிலுக்குசாமரம் வீசுகிறதுமரம்.- ச.ஜெய்.கதவுகளுக்குள் அடைபட்ட காலம்புது வீட்டுக்குக் குடி புகுந்ததும்அப்பா படத்தைஆணியடித்து மாட்டியாயிற்று...அவளுக்குப் பிடிக்குமெனபுத்தக அலமாரியைஅக்னி மூலைப்பக்கமாய்இடமாற்றியாயிற்று...பயணத்தின் பாதியில்உடைந்தபுத்தர் சிலையைஎறிய மனமில்லாமல்பரண்மேல் போட்டாயிற்று...எல்லாம் முடிந்தபின்எஞ்சியிருக்கும்பழைய வீட்டின் ஞாபகங்களைத்தான்எங்கு வைப்பதென்றேதெரியவில்லை.- இனியவன் காளிதாஸ்.வேண்டுதல்சாலையோரம் அமைந்திருக்கும்அந்தக் கோயிலின்சந்நிதியை நோக்கிகாணிக்கைக் காசுவீசி எறிவதற்கு போதுமானதாகவேஇருக்கிறதுபேருந்தின்ஜன்னல் அளவு.வேண்டுதலின் முடிவில்கன்னத்தில் போட்டபடியேஇறைவனிடத்தில் நான் கேட்டவரங்களனைத்தும் வந்துசேர்வதற்குத்தான்இடம் தருவதில்லைஅந்தச் சிறிய சாளரம்.-வெ.தமிழ்க்கனல் .சாஸ்வதம் நிரம்பி வழிகிறதுமளிகைக் கடை பாக்கியால்சிகரெட் அட்டைபாயைச் சுருட்டும் பாவனையில்தான்பிதுக்கி எடுக்க வேண்டியிருக்கிறதுபற்பசையைகடிகாரம் குறைத்துக் காட்டும் நேரத்தைசமன்செய்யதுரிதப்படுத்த வேண்டியிருக்கிறதுஇரு கால்களை... குழல் விளக்கின்தவணை முறை வெளிச்சத்தில்தான்நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறதுஅன்றாடப் பணிகளை... இருப்பினும்எல்லா நாட்களிலும்மூன்று வேளையும்நேரம் தவறாமல்பசித்துவிடுகிறது வயிறு.- மகிவனி .சூளைக்காரர் வாழ்வுநெருப்பில் சூடாகி வெந்துபோயினசெங்கல்கள்எங்கள் உடல்களும் கூடவேவெந்து கறுத்துத்தான் போயின...செங்கல் வில்லாகவிலை ஏறிப்போவதும்எங்கள் கூலி கடுகாகக் குறைந்துபோவதும்நீங்கள் அறியாததல்ல...பல மாடி வீடுகள் கட்டசெங்கல் சுட்டுத் தந்தஎங்களையும் மழை புரட்டிக்கொண்டே இருக்கிறதுஇழுத்துக் கட்டிக்கொண்டே இருக்கிறோம்ஓட்டைக் கூரையை-கலை.குளிர்ச்சியின் இதம்ஓய்ந்திருக்கிறது மழைகுளிர்ச்சி பரவிய வெளியைகிளைகளால்தயக்கத்துடன் ஸ்பரிசிக்கும் மரம்ஞாபகப்படுத்துகிறதுபுத்தம்புது நாய்க்குட்டியின்நெற்றியைத்தொட்டுத் தொட்டுசிலிர்க்கும் ஒரு குழந்தையை!- மகேஷ் சிபி .முடிவற்ற தேடல்தாகத்தில் தவித்தவேரின் வாய்கள்நிலத்தடி நீரைகுடிக்க முயன்றுகளைத்துவிடுகின்றனகட்டிடங்களின்காலடி எங்கும்ஆழ்துளைக் கிணறுகள். - சங்கீதா சுரேஷ்.பக்தர்களைக் கண்டடையும் கடவுள்மண்டகப்படியை முன்னிட்டு பலரும்குடும்பங்களாக நிறைந்திருந்தனர் கோயிலில்வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த குழந்தைகள்கோயில் வளாகம் தந்த பிரம்மாண்டத்தில்குதூகலமாய் விளையாடத் தொடங்குகின்றனஅலங்காரம் முடிவுற்று திரைச்சீலை விலகிஇருவரிசைகளில் எதிரே நின்றவர்கள்கன்னத்தில் போட்டுக்கொள்ளபூஜையைத் தொடங்குகிறார் அர்ச்சகர்தீபாராதனை நெருங்கும் வேளையில்குழந்தைகளைக் கூவியழைக்கிறார்கள்சாமி கும்பிடஎதையும் காதில் வாங்காதஅக்குழந்தைகளோடுஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கடவுள்.- நேசன் மகதி.ரசனைபார்வையற்றரயில் பிச்சைக்காரரின்பாடல்களுக்குதற்காலிக ரசிகர்களாகும்பயணிகள்ஜன்னலுக்குவெளியே பார்வையைப்பதிக்கின்றனர்பிச்சைப்பாத்திரம்நீளும் கணங்களில்...- ப்ரணா.தொடர்பு எல்லைக்கு வெளியேஅடிக்கடி இல்லாவிட்டாலும்எப்போதாவது எதிர்ப்படுகிறான்பள்ளிக்காலத்துக் குறும்புகள்மார்கழிக் கோலம் ரசிக்கபால்ய வீதிகளில்குட்டிச் சைக்கிளில் சுற்றித்திரிந்ததெனஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடித்துஅம்மாவின் உடல்நிலைதங்கையின் குழந்தை எனவழக்கமான விசாரிப்புகளுடன்ஒவ்வொரு முறையும்கைகுலுக்கி விடைபெறுகையில்மறக்காமல் அலைபேசி எண்குறித்துக்கொள்ளும்போதுவிளங்கிவிடுகிறதுஅவன் நினைவில்நானில்லையென்பது. -காசாவயல் கண்ணன்