எஸ்.ஜே.சிவசங்கருக்கு நேசக்கரம் நீட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்

திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
எஸ்.ஜே.சிவசங்கர்
எஸ்.ஜே.சிவசங்கர்

கவனிக்கத்தக்க படைப்புகளை தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்திருப்பவர் எஸ்.ஜே.சிவசங்கர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய படைப்பாளியான இவர் இன்று திடீர் மாரடைப்புக்கு உள்ளானார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்து இயக்குநர் பா.ரஞ்சித் அவரது சிகிச்சைக்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்.ஜே.சிவசங்கர். கடந்தை கூடும் கேயஸ் தியரியும், சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை, இது கருப்பர்களின் காலம், யா ஓ, பிக்காசோ ஒரு எருதை வரைகிறார், அம்பேத்கர் கடிதங்கள் ஆகிய நூல்கள் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள். இதேபோல் 5க்கும் அதிகமான குறும்படங்களும் எடுத்துள்ளார்.

எழுத்துலகம் சார்ந்தே அவரது வாழ்வைத் தகவமைத்துக் கொண்டதால் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற நிலையிலேயே இருந்த எஸ்.ஜே.சிவசங்கருக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் நான்கு இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த விவரங்கள் அவரது குடும்பத்தினர் மூலம் தமிழகம் முழுவதும் இருக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் தெரியவந்தது.

எஸ்.ஜே.சிவசங்கரின் சிகிச்சைக்கு 4.30 லட்சம் தேவை என மருத்துவர்கள் சொல்ல இலக்கியவாதிகள் குழுக்களில் இது அதிகம் பகிரப்பட்டது. எஸ்.ஜே.சிவசங்கர், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பகத்திலும் நூல்கள் எழுதியுள்ளார். அதேபோல் நீலம் இதழிலும் அவர் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் இயக்குநர் பா.ரஞ்சித், சிவசங்கரின் எழுத்துக்களையும் வாசித்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடாக வந்த சிவசங்கரின் அம்பேத்கரின் கடிதங்கள் பரவலான வாசிப்புக்கு உள்ளானதும் காரணம்.

பா.ரஞ்சித், உடனே சிவசங்கரின் சிகிச்சைக்கு தன் பங்களிப்பாக 2.20 லட்சத்தை அவரது குடும்பத்தினரின் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். குமரி மாவட்ட இலக்கியவாதிகள் மீதத் தொகையினைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in