இன்றும் வீரியத்துடன் சாதி: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வேதனை

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

இன்றும் கூட சாதி வீரியத்துடன் இருப்பதை சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தன் முகநூல் பக்கத்தில் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் இதுகுறித்து தன் முகநூலில் வேதனையோடு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய மகனுக்கு இம்மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருமணம் வைத்திருக்கிறேன். அதற்காக ஊர், ஊராகச் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர்கள், உறவினர்கள் சொல்கின்ற அடையாளங்களை வைத்து குறிப்பிட்ட தெருவில் போய் காரை நிறுத்தி விட்டு நான் சந்திக்க வேண்டிய நபர்களின் பெயரைச் சொன்னால் தெரியாது என்கிறார்கள். அவர் பார்க்கும் வேலை, அவருடைய அங்க அடையாளங்கள் என எதைச் சொன்னாலும் அப்படியான ஆளே இங்கே இல்லை என்கிறார்கள்.  பிறகு அவர்களாகவே முடிவு பண்ணி நம்மிடம் கேட்கிறார்கள்."அவரு என்ன ஜாதிக்காரர்?"  என சொன்ன அடுத்த வினாடியே வீட்டை அடையாளம் காட்டுகிறார்கள். வழி சொல்கிறார்கள்.

என்ன விசித்திரம் பாருங்கள்.கண்ணுக்கு தெரிகிற எதையும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். அது எங்களுக்கு தேவையில்லை. ஆனால் கண்ணுக்கே தெரியாத ஜாதியை நாங்கள் கண்டுபிடித்து வைத்திருப்போம்.ஏனெனில் அது எங்களுக்கு தேவை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.  இந்த லட்சணத்தில் ஜாதியை ஒழிக்கப் போகிறார்களாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in