42 ஆயிரம் மைல்கள்.. 4 ஆயிரம் உயிரினங்கள்!

டார்வினை எளிதாய் பேசும் ஒரு நூல்
42 ஆயிரம் மைல்கள்.. 
4 ஆயிரம் உயிரினங்கள்!
சார்லஸ் டார்வின்

கிரேட் பிரிட்டனின் பிளைமவுத் துறைமுக நகரம். இங்கிருந்து 1831 டிசம்பர் 27-ல் தென்மேற்கு நோக்கி பயணிக்கிறது பீகிள் கப்பல். அதில், பின்னாளில் நீண்ட நெடு நூற்றாண்டுகளுக்கும் பேசப்படக்கூடிய 22 வயது இளைஞன் ஒருவன் வீற்றிருக்கிறான். அப்போது அவனுக்கே தெரியாது தன்னையும், தன் கண்டுபிடிப்பையும்தான் எதிர்கால விஞ்ஞான உலகம் மையப்புள்ளியாக வைத்து நகரப்போகிறது என்பது.

அந்த இளைஞன் பெயர் சார்லஸ் டார்வின். பிளைமவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பீகிள், பசிபிக் பெருங்கடலில் பயணித்து தென் அமெரிக்காவின் பேகியா துறைமுகத்தை அடைகிறது. திரும்ப, அங்கிருந்து பிளைமவுத் நகருக்கே செலுத்தப்படுகிறது. பிறகு, மறுபடியும் பேகியா துறைமுகம் சென்று தென்அமெரிக்காவின் தெற்குமுனையில் திரும்பி அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் என ததும்பும் சமுத்திரங்களின் கரையோரம் உள்ள ஆஸ்திரேலியா, மொரிசியஸ், ஆப்பிரிக்காவின் தென்முனையான கேப்டவுன் என்றெல்லாம் சென்று, பேகியாவிற்குள் நுழைந்து பிளைமவுத் துறைமுகத்தில் 1836 அக்டோபர் 2-ம் தேதியன்று நங்கூரமிட்டு நிற்கிறது.

’அறிவியல் புரட்சியாளர் டார்வின்’ நூலின் அட்டைப்படம்
’அறிவியல் புரட்சியாளர் டார்வின்’ நூலின் அட்டைப்படம்

பீகிள், உலகையே சுற்றி வர எடுத்துக் கொண்ட காலம் 4 வருடம் 11 மாதங்கள். இந்த பீகிள் கப்பல் முதல் சுற்றில் பிளைமவுத் - பேகியா - பிளைமவுத் என பயணித்த போது, தனக்கு இன்னொரு கப்பலை துணைக்கு ஏற்படுத்திக் கொண்டது. அதன் பெயர் ’அட்வென்ச்சர்’.

இந்த இரண்டு கப்பல்களின் மாலுமிகளும், கேப்டன்களும் பயணித்ததன் நோக்கம் உலக நாடுகளின் கடல்வழி தடத்தின் தூர நில அளவீடுகளுக்கான வரைபடத்தை தயாரிக்கவே. ஆனால், இதில் பயணித்த சார்லஸ் டார்வினின் பணியோ வேறு. இந்தக் கப்பல் சென்று நங்கூரமிடும் துறைமுகங்களில் எல்லாம் நின்று நிதானித்து அந்தந்த நாடுகள், தீவுகளுக்குள் நுழைந்து, தாவர, நீர், நில வாழ் உயிரினங்களைப் பற்றி ஆராய்வதும், சடலங்கள், பாசில்களான படிவங்களை சேகரிப்பதும் ஆகும்.

சார்லஸ் டார்வின் 5 ஆண்டுகளில் பயணம் செய்த கடல் வழி தூரம் 40 ஆயிரம் மைல்கள்.

அப்படி டார்வின், சுமார் 5 ஆண்டுகளில் பயணம் செய்த கடல் வழி தூரம் 40 ஆயிரம் மைல்கள். நிலவழிப்பயணம் 2 ஆயிரம் மைல்கள். அங்கங்கே சேகரித்த நில அமைப்பியல், தாவரவியல், விலங்கியல் தகவல்கள் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள்; நாட்குறிப்புகள் 800 பக்கங்கள், எலும்புகள், உலர்ந்த உயிரின மாதிரிகள் 4 ஆயிரம். எரிசாராயத்தில் பக்குவப்படுத்தப்பட்ட உயிரினப் பொருட்கள் 1500. உலகம் பூராவும் சுற்றவும், ஆய்வு செய்யவும் அவருக்கு அரசோ, எந்த தனியார் அமைப்போ செலவுக்கு அள்ளியில்லை, கிள்ளிக் கூட கொடுக்கவில்லை.

டார்வினின் தாத்தா எராமஸ் டார்வின், ஸூனோமியா (Zoonomia) என்ற நூலை 60 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தார். அதன் கருத்தோட்டத்தில் ஈர்க்கப்படாமல் அலட்சியமாக டார்வின் இருந்தார். உலகம் சுற்றி அத்தனை உயிர்ப்பொருட்களை சேகரித்து, ஆய்வு செய்து வந்த பிறகே தாத்தா எராமஸ் டார்வின் ஆராய்ச்சியில் உண்மை இருக்கிறது என்று டார்வின் உணர்ந்தார்.

இதற்காக இளைஞன் சார்லஸ் டார்வினின் அப்பா ராபர்ட் டார்வின், மாதந்தோறும் ஆயிரம் பவுண்ட் பணம் அனுப்பி வைத்தார். அந்த ஆயிரம் பவுண்ட் இன்றைய ரூபாய் மதிப்புக்கு ரூ. 1 லட்சமாக இருக்கலாம். ஆனால், 1830-களில் ஒரு பவுண்ட் என்பது 1990-களுக்கு ஆயிரம் பவுண்டுக்கு சமம். அப்படியானால் 5 வருடங்களுக்கு இந்த ஆராய்ச்சிக்கு சார்லஸ் டார்வினின் அப்பா, எத்தனை கோடி பவுண்டுகள் செலவு செய்திருப்பார். அவர் குடும்பம் எப்படிப்பட்ட செல்வச்செழிப்பான குடும்பமாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தால், மலைப்பாகத்தான் இருக்கும்.

அதைவிட, டார்வினின் தாத்தா எராமஸ் டார்வின் ஸூனோமியா (Zoonomia) என்ற நூலை 60 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தார். டார்வின், அதன் கருத்தோட்டத்தில் ஈர்க்கப்படாமல் அலட்சியமாக இருந்தார். உலகம் சுற்றி அத்தனை உயிர்ப்பொருட்களை சேகரித்து, ஆய்வு செய்து வந்த பிறகே தாத்தா எராமஸ் டார்வின் ஆராய்ச்சியில் உண்மை இருக்கிறது என்று டார்வின் உணர்ந்தார். டார்வின் காலம் 1800-களில். அதற்கு 60 வருடம் முன் என்பது 1750-களுக்கு கொண்டு செல்கிறது. அப்போதே, அப்படியொரு அறிவியல் நூல் இவர் குடும்பத்தில் இருந்து வெளிவந்துள்ளது என எண்ணும்போது எழும் பெருவியப்பை அடக்கவே முடிவதில்லை. இந்த இடத்தில் இந்த குடும்பம் பொருளாதார வளம் மட்டுமல்ல, எப்படிப்பட்ட அறிவும், சிந்தனை வளமும் மிக்கது என்றும் பிரமிக்க வைக்கிறது.

டார்வின்- எம்மா வாழ்க்கை, அவர்களின் குழந்தைகள், அவற்றில் இறந்த குழந்தைகளின் சோகம், உடல் உபாதைகள், தன் மனைவிக்கு பிரசவம் நெருங்கும்போதெல்லாம் டார்வினுக்கு ஏற்பட்ட இதயப் படபடப்பு, டார்வின் பங்கேற்ற விஞ்ஞானிகள் மாநாடு, இவரின் கண்டுபிடிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கருத்து முதல்வாதிகள் உள்ளிட்டவை குறித்தும் ‘அறிவியல் புரட்சியாளர் டார்வின்’ நூல் பேசுகிறது.

உயிரினங்களின் தோற்றம். அதாவது குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்கிற இதுவரை அழிக்க முடியாத கண்டுபிடிப்பை, உலகின் பரிணாம வளர்ச்சியை உலகுக்கு சொன்னவர் டார்வின். அவரது வாழ்க்கையை முழுவதுமாக சுவைபட 176 பக்கங்களில் விவரிக்கிறது, ‘அறிவியல் புரட்சியாளர் டார்வின்’ நூல். இது டார்வின்- எம்மா வாழ்க்கை பற்றியும் பேசுகிறது. அவர்களின் குழந்தைகள் குறித்தும், அவற்றில் இறந்த குழந்தைகளின் சோகம், உடல் உபாதைகள், தன் மனைவிக்கு பிரசவம் நெருங்கும்போதெல்லாம் டார்வினுக்கு ஏற்பட்ட இதயப் படபடப்பு, டார்வின் பங்கேற்ற விஞ்ஞானிகள் மாநாடு, இவரின் கண்டுபிடிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கருத்து முதல்வாதிகள், அவர்கள் இவரின் கண்டுபிடிப்பைக் கொண்டே தங்களின் படைப்பை அறிவியலாக மாற்ற முயன்றவை அடுக்கடுக்காக சம்பவங்களாக பின்னிப் பிணைகின்றன.

டார்வினின் எத்தனையோ கண்டுபிடிப்புகளை, எழுத்துகளை, குறிப்புகளை மிகச்சுருக்கமாக வெறும் 176 பக்கத்தில் கொடுக்கும் புத்தகமாக விளக்குகிறது ஆர்.பெரியசாமி எழுதிய அறிவியல் புரட்சியாளர் டார்வின் என்ற இந்த நூல். ஒரு பக்கம் கடல்பயணம்; இன்னொரு பக்கம் லெளகீக வாழ்க்கை, அடுத்ததாக கண்டுபிடிப்புகளின் மீதான விவாதம் என திரிவேணியாக நம் மனதுக்குள் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது இந்த நூல்.

வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை, விலை: ரூ.150.

Related Stories

No stories found.