நிஜமான காதல்னா இதுதான்… வியப்பில் ஆழ்த்தும் கேரள காதல் ஜோடி!

அம்ருதா - அகில்
அம்ருதா - அகில்

இந்த உலகத்தில் அதிகம் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட விஷயம் காதல் தான். அதனாலேயே பலர் உண்மையான காதல்னா அழகு தேவையில்ல, சாதி, மதம் இல்லை, அது எல்லைகளைக் கடந்தது. அப்படின்னு பல விஷயங்கள் சொல்ல கேட்டிருப்போம்.

நிஜத்தில் ஒரு தம்பதி அழகு, அந்தஸ்தை எல்லாம் கடந்து பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளனர். அதிலும் காதல் என்ற ஒற்றை வார்த்தையால் 11 வருடங்களாக சந்தோஷமாக பயணித்து இப்போது திருமண பந்தத்திலும் காதலோடு பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அம்ருதா - அகில் ஜோடி
அம்ருதா - அகில் ஜோடி

அந்த பெண்ணின் பெயர் அம்ருதா. அந்த வாலிபரின் பெயர் அகில். இவர்கள் இருவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கினார்கள். அம்ரிதா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. முகம் முழுக்க தீக்காயம் பட்டதால் இவருடைய முகம் அப்படியே சிதிலமடைந்து இருக்கிறது.

அம்ருதா - அகில் இணை
அம்ருதா - அகில் இணை

இவருடைய காதுகள் முழுமையாக போய்விட்டதோடு, கண்ணில் இமைகளும் மூடாது, ஆனாலும் இவர் அவருடைய பெற்றோர் கொடுத்த பாசத்தின் மூலம் அடுத்து வாழ வேண்டும் என்று அந்த வலி வேதனையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். பள்ளிக்கூடம், கல்லூரி என எங்கும் தன்னைச் சுற்றி, பரிதாபப்படும் போதும், விலகும் போதும் மனம் தளராமல் படித்துக்கொண்டிருந்த அவருக்கு தனது வாழ்க்கையில் ஒரு நபர், தன்னையும் நேசிக்கும் நபர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாவார் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

அம்ருதா - அகில் ஜோடி
அம்ருதா - அகில் ஜோடி

ஃபேஸ்புக்கில் அறிமுகமான அகிலுடன் முதலில் நட்பாக பழகி இருக்கிறார். பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலிக்கும் போதே அம்ரிதா தன்னை பற்றி எல்லா விவரத்தையும் கூறிவிட்டாராம். பிறகு இருவரும் நேரடியாக சந்தித்து இருக்கிறார்கள். அப்போதும் அகில் தன்னுடைய காதலில் உறுதியாக இருக்க பிறகு வீட்டில் சொல்லி திருமணத்தை முடித்து இருக்கின்றார்.

அம்ருதா - அகில் ஜோடி
அம்ருதா - அகில் ஜோடி

இப்போது இவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் என எல்லாவற்றிலும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அதை பார்த்து பலர் அகில் அழகாக இருக்கிறார், இவர் எதுக்கு இந்த மாதிரி பொண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி கேட்டு கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் இந்த பொண்ணுக்கு இருக்கும் குறையை வைத்து இவன் பிரபலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று சிலர் கமெண்ட் போடுகிறார்களாம்.

அம்ருதா - அகில் ஜோடி
அம்ருதா - அகில் ஜோடி

"ஆனாலும், யார் என்ன கமெண்ட் செய்தாலும், நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. எனக்கு அம்மா கிடையாது. அம்மா மாதிரி எனக்கு அம்ரிதா இருக்கிறார். அதனால் நான் அவரை எப்போதும் காதலிப்பேன். எனக்கு வெளி அழகு தேவையே இல்லை. அமிர்தாவின் குணம் தான் எனக்கு ரொம்பவே பிடித்தது" என்று அகில் பேசியிருக்கிறார். இவருக்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in