தங்கம்
தங்கம்

45 ஆயிரம் ரூபாயைக் கடந்த தங்கத்தின் விலை: நகைப்பிரியர்கள் கலக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி விலை குறைந்து விற்பனையான தங்கம், நேற்றும் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,615 ரூபாயாகவும், ஒரு சவரன் 44,920 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் 5,645 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,160 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6,115 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 48,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி
வெள்ளி

வெள்ளி விலை 1 ரூபாய் 70 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 77.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 77,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in