கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, 45,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.
நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 35 குறைந்து ரூ.5735-க்கு விற்பனை செய்யப்ப்பட்டது. இன்று (அக்.30) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 6,185 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 49,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, 78.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து 78,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!