46 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை... கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!

தங்கம்
தங்கம்
Updated on
2 min read

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக உயர்ந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, 46,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,735 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,880 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் 5,755 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாயாகவும் உயர்ந்து ஒரு சவரன் 46,040 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 6,225 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 49,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 80 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து இன்று சவரன் 46 ஆயிரத்தை கடந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in