கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் இன்றைக்கு சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு விலை குறைந்த விற்பனையான தங்கம், கடந்த சில தினங்களாக ஏற்றத்துடன் விற்பனையாகி வருகிறது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,635 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,080 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 6,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 49,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை 1ரூபாய் 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 79.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 79,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!