
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, சவரன் 44,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகம் முழுவதும் தீபாவளி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,590 ரூபாயாகவும், ஒரு சவரன் 44,720 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் 5,615 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,920 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 6,085 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 48,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!