நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையான நிலையில் இன்று மேலும் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,700 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 45,600 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,670 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,360 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 6,140 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 49,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து, 77.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 700 ரூபாய் குறைந்து 77,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்